முகப்பு
செய்திகள்

பாடகர் உதித் நாராயண் குடியிருப்பில் தீ விபத்து!

உதித் நாராயண் வசிக்கும் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Updated On : 7 ஜனவரி, 2025 at 12:53 PM
உதித் நாராயண்
பகிர்:

பாடகர் உதித் நாராயணின் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை அந்தேரி தெற்கு பகுதியில் திரைப்படப் பாடகர் உதித் நாராயணன் வசிக்கும் ஸ்கைபேன் குடியிருப்பில் நேற்று இரவு 9.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் பலியானதாகவும் சிலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

குடியிருப்பு வாசிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு 8 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்க வீரர்கள் போராடியுள்ளனர்.

Advertisement

இந்த விபத்தில் பலியானவர் உதித் நாராயணின் அண்டை வீட்டுக்காரரான ராகுல் மிஸ்ரா (75) என்று தெரிய வந்துள்ளது. 11-வது மாடியில் உதித் நாராயணுக்கு அடுத்த வீட்டில் வசிக்கும் இவர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவருடன் இருந்த உறவினரான ரௌனக் மிஸ்ரா படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்துக்கான காரணமாக மின் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும், மிஸ்ராவின் குடும்பம் ஏற்றிய விளக்கின் தீ வீட்டின் திரைகளில் பற்றியதாகவும், மிஸ்ராவின் மனைவி பாதுகாவலர்களிடம் ஓடிச் சென்று உதவி கேட்டு வருவதற்குள் தீ வீடு முழுக்கப் பரவியதாகவும் குடியிருப்பு வாசிகள் கூறுகின்றனர்.

இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், விபத்து ஏற்பட்டதும் அந்தக் குடியிருப்புக்குச் செல்லும் சாலைகள் அனைத்து அடைக்கப்பட்டு மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டது.

சம்பவம் நடைபெற்றபோது பாடகர் உதித் நாராயண் வீட்டில் இல்லை என்று குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments