விடாமுயற்சி திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
ஆனால், புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த லைகா நிறுவனம், சில தவிர்க்க முடியாத காரணத்தால் விடாமுயற்சி பொங்கல் வெளியீட்டில் இருந்து விலகுகிறது. விரைவில் மறுஅறிவிப்பு வெளியாகும் என புதிய அறிவிப்பை வெளியிட்டனர். இது அஜித் ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இதையும் படிக்க: கூலி - தாய்லாந்து சென்ற ரஜினி!
தற்போது, குட் பேட் அக்லி ஏப். 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் விடாமுயற்சி வெளியீடு குறித்து கேள்விகள் எழுந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தை பிப்ரவரி வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தின் டிரைலர் சென்சார் முடிந்துள்ளதாகவும் 2.24 நிமிடம் கொண்ட டிரைலர் பொங்கல் அன்று வெளியிடப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.