கேம் சேஞ்சர் நடிகர் ராம் சரண் 
செய்திகள்

`கேம் சேஞ்சர்' டிக்கெட் உயர்வைத் திரும்பப் பெற்றது தெலங்கானா அரசு!

எதிர்காலத்தில் அதிகாலை காட்சிகள் அனுமதிக்கப்படாது என்றும் தெலங்கானா அரசு கூறியது.

DIN

கேம் சேஞ்சர் படத்தின் டிக்கெட் உயர்வுக்கு அளித்த உத்தரவை தெலங்கானா அரசு திரும்பப் பெற்றது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா, நடிகை கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் முதல் நேரடி தெலுங்குப் படமாக இந்தப் படம் வெள்ளிக்கிழமை (ஜன. 10) வெளியானது.

கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, தெலங்கானாவில் ஜனவரி 10 ஆம் தேதி மட்டும் 6 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்பட்டது. முதல்நாளில் மல்டிஃபிளக்ஸ் திரையரங்குகளில் கூடுதலாக ரூ. 150 வசூலிக்கவும், ஒற்றை திரையரங்குகளில் கூடுதலாக ரூ. 100 வசூலிக்கவும் அனுமதிக்கப்பட்டது.

தொடர்ந்து, ஜனவரி 11 முதல் 19 வரையிலான 9 நாள்களில் (5 காட்சிகள்) மல்டிஃபிளக்ஸ் திரையரங்குகளில் கூடுதலாக ரூ. 100 கட்டணமும், ஒற்றைத் திரையரங்குகளில் ரூ. 50 கூடுதல் கட்டணமும் வசூலிக்க அனுமதிக்கப்பட்டது.

மேலும், போதைப்பொருள் தடுப்பு மற்றும் சைபர் குற்றங்களின் தாக்கம் குறித்த விளம்பரங்கள் திரையிடப்பட வேண்டும் என்று தெலங்கானா அரசு கூறியிருந்தது.

இதனையடுத்து, திரையரங்குகளில் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டிக்கெட் விலை உயர்வைக் கண்டித்து, தெலங்கானா அரசை காங்கிரஸார் விமர்சித்தனர். இந்த நிலையில், திரையரங்குகளுக்கு கூடுதல் கட்டணம் குறித்த அளிக்கப்பட்ட உத்தரவை தெலங்கானா அரசு ரத்து செய்தது.

மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பொது நலன், சுகாதாரம், பாதுகாப்பு முதலானவற்றை கருத்தில்கொண்டு, எதிர்காலத்தில் அதிகாலை காட்சிகள் அனுமதிக்கப்படாது என்றும் தெலங்கானா அரசு கூறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவறாக சித்திரிக்கப்பட்ட ஏஐ புகைப்படங்களால் மனமுடைந்த பிரியங்கா மோகன்!

ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்திப்பு! | TVK | Vijay

தமிழக விவசாயிகள் இந்தியளவில் முன்மாதிரி: அமைச்சர் எம்.ஆர்.கே.பி

புது தில்லியில் தீபாவளிக்கு 5 நாள்கள் பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்

டிராய் என்ற பெயரில் வரும் ஆள்மாறாட்ட ஐவிஆர் அழைப்புகள்!

SCROLL FOR NEXT