செய்திகள்

விஷாலின் உடல்நல பாதிப்புக்கு நான் காரணமா? பாலா விளக்கம்!

விஷால் குறித்து பாலா பேசியுள்ளார்...

DIN

நடிகர் விஷாலின் உடல் நலம் பாதிக்கப்பட்டது குறித்து இயக்குநர் பாலா கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் சில நாள்களுக்கு முன் மத கஜ ராஜா படத்தின் புரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போது, அவரால் சரியாக ஒலிவாங்கியை (மைக்) பிடிக்க முடியாத அளவிற்கு கை நடுங்கிக்கொண்டே இருந்தது.

மேலும், பேசும்போதும் அமர்ந்திருந்தபோதும் விஷால் கண்ணீர் விட்டபடி இருந்தார். இதைக்கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து, தனக்கு ஒன்றும் ஆகவில்லை என விஷால் தெரிவித்ததுடன் வைரல் காய்ச்சலால்தான் இப்படியானது என்றார்.

இதற்கிடையே, சமூக வலைதளங்களில் பலரும் விஷால் உடல் நலம் பாதிக்கப்பட்டதற்குக் காரணம் அவன் இவன் படத்தில் நடித்ததுதான் என கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், வணங்கான் படத்தின் வெற்றிவிழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பாலாவிடம், “ நடிகர் விஷால் அவன் இவன் படத்தில் நடித்ததால்தான் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது என சொல்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பாலா, “என்ன பதில் சொல்வது? அதற்கு மருத்துவ சான்றிதழ் ஏதாவது வாங்கிக்கொடுக்கலாமா? யாரோ சொன்னார்கள் நான் விஷாலின் கண்களை சேர்த்து தைய்த்துவிட்டேன் என. அதெப்படி முடியும்? யாருக்கு என்ன தோன்றுகிறதோ அதை பேசுகிறார்கள். இதையெல்லாம் கண்டுகொள்ள வேண்டியதில்லை” எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

காதி டிரைலர் தேதி!

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

SCROLL FOR NEXT