விடாமுயற்சி படத்தில் அஜித் குமார்.  படம்: யூடியூப் / சன் டிவி.
செய்திகள்

விடாமுயற்சி தலைப்புக்கென ஒரு சக்தி இருக்கிறது: அஜித் குமார்

பொங்கலுக்கு விடாமுயற்சி படம் வெளியாகாதது குறித்து நடிகர் அஜித் குமார் நம்பிக்கையோடு பேசியுள்ளார்.

DIN

பொங்கலுக்கு விடாமுயற்சி படம் வெளியாகாவிட்டால் என்ன நம் படம் வெளியாகும் நாள்தான் பண்டிகை என நடிகர் அஜித் குமார் நம்பிக்கையோடு பேசியுள்ளார்.

விடாமுயற்சி படம் நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்தன. முதலில் பொங்கலுக்கு வரவிருந்தது. பின்னர், ஒத்திவைக்கப்பட்டது. அதனால் 9 சிறிய பட்ஜெட் படங்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சி படத்தின் டிரைலர், பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிப்.6ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதன் புரமோஷனுக்காக இயக்குநர் மகிழ் திருமேனி நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார்.

’விடாமுயற்சி’ வெளியாகும் நாள்தான் பண்டிகை

அதில் அவர் கூறியதாவது:

பொங்கலுக்கு விடாமுயற்சி படம் வெளியாகதது குறித்து எனது வருத்தத்தை நான் அஜித் சாரிடம் கூறினேன். அதற்கு அஜித் சார், ‘மகிழ், கவலைப்படாதீர்கள். பண்டிகை நாள்களில் வெளிவராவிட்டால் என்ன? நம் படம் வரும்போது அந்தநாள் பண்டிகை நாளாக மாறும்’ என நம்பிக்கையோடு கூறினார். அதுதான் அஜித் சாரின் குணம்.

அஜித் சாருடைய சில வார்த்தைகள் அப்படியே நடக்கும். நான் இதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

’விடாமுயற்சி தலைப்புக்கென்று ஒரு சக்தி இருக்கிறது. அது நம்மை சோதிக்கிறது. அது நம்மிடம், நீங்கள் என்னுடைய பெயரை வைக்க தகுதியானவர்களா? என அது கேட்கிறது’ என்று அஜித் சார் கூறினார்.

இதைவிடவும் வேறென்ன உத்வேகம் வேண்டும் என மகிழ்திருமேனி நெகிழ்ச்சியாகப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்: மாநகராட்சி ஆணையரிடம் வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

SCROLL FOR NEXT