சத்யா / ஸ்ரீகுமார் இன்ஸ்டாகிராம்
செய்திகள்

எதிர்நீச்சல் சத்யா, ஸ்ரீகுமார் நடிக்கும் புதிய தொடர்!

எதிர்நீச்சல் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை சத்யா மற்றும் ஸ்ரீகுமார் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் தனம் தொடர்

DIN

எதிர்நீச்சல் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை சத்யா மற்றும் ஸ்ரீகுமார் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் தனம் தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இது குறித்த முன்னோட்ட விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை பாத்திரத்தில் ஆதி குணசேகரனுக்கு தங்கையாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை சத்யா. தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் 2 தொடரிலும் நடித்து வருகிறார்.

இதனிடையே புதிய தொடரில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானதாக செய்திகள் வெளியாகின. தற்போது அந்தத் தொடரின் பெயர் மற்றும் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. இத்தொடருக்கு தனம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சத்யா

விஜய் தொலைக்காட்சியில் இத்தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. ஆனால், ஒளிபரப்பு நேரம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

தனம் தொடரில் சத்யாவுக்கு ஜோடியாக நடிகர் ஸ்ரீகுமார் நடிக்கிறார். இவர் வானத்தைப்போல, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல தொடர்களில் நாயகனாக நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தவர். இதுவரை 25க்கும் அதிகமான தொடர்களில் ஸ்ரீகுமார் நடித்துள்ளார்.

இதனிடையே சத்யா - ஸ்ரீகுமார் இணைந்து நடிக்கும் தனம் தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. இதில் சத்யா, ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.

இது தனது கணவர் ஸ்ரீகுமாரின் ஆட்டோ என்றும் அவர் இறந்த பிறகு அந்த ஆட்டோவின் மூலம் சத்யா தனது குடும்பத்தை நடத்துவதைப் போன்றும் முன்னோட்ட விடியோவில் காட்டப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | மாரி 2 தொடரில் இணையும் பிரபலங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியார் பல்கலைக் கழக சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: டிடிவி தினகரன்

ஆக்சிஜன் சிலை... சித்தி இத்னானி!

ஹேப்பி தந்தேராஸ்... நேஹா சர்மா!

குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கலாமா? சரிசெய்யும் 10 இயற்கை வழிமுறைகள்!

பைசன், டியூட், டீசல் முதல்நாள் வசூல்... தீபாவளி வெற்றியாளர் யார்?

SCROLL FOR NEXT