முகப்பு
செய்திகள்

ரவி மோகன் - 34 பட பெயர் அறிவிப்பு!

ரவி மோகன் - 34 படத்தின் பெயர்...

செய்திகள்

ரவி மோகன் - 34 பட பெயர் அறிவிப்பு!

ரவி மோகன் - 34 படத்தின் பெயர்...

Updated On : 29 ஜனவரி, 2025 at 6:13 AM
பகிர்:

நடிகர் ரவி மோகன் நடிக்கும் அவரது 34-வது படத்தின் பெயர் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகர் ரவி மோகனின் 34-வது படத்தின் பூஜை அண்மையில் சென்னையில் நடைபெற்றது. டாடா இயக்குநர் கணேஷ் பாபு இயக்கும் இப்படத்தில் நாயகியாக தவ்தி ஜிவால் நடிக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் சக்தி, காயத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இப்படத்திலிருந்து ஹாரிஸ் விலகியதாகவும் அவருக்குப் பதில் புதிய இசையமைப்பாளராக சாம் சிஎஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில், இப்படத்திற்கு கராத்தே பாபு எனப் பெயரிட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் டீசர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. அரசியல் - கேங்ஸ்டர் பின்னணியில் இப்படம் உருவாகி வருவதாகத் தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →