முகப்பு
செய்திகள்

எஸ்கே - 25 பெயர் டீசர்!

எஸ்கே - 25 படத்தின் பெயர் குறித்து...

Updated On : 29 ஜனவரி, 2025 at 10:37 AM
பகிர்:

சிவகார்த்திகேயன் - சுதா கொங்காரா படத்தின் பெயர் டீசர் வெளியாகியுள்ளது.

அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர நடிகராக வளர்ந்துள்ளார்.

அமரன் படத்தை முடித்தபின் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் படமொன்றில் நடித்து வருகிறார். எஸ்கே - 23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது, இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடித்து வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்திற்கு ‘பராசக்தி’ என பெயரிட்டுள்ளதை டீசர் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.