முகப்பு
செய்திகள்

ரூ.300 கோடி வசூலைக் கடந்த ஹவுஸ்ஃபுல் 5!

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவான ஹவுஸ்ஃபுல் 5 படத்தின் வசூல் குறித்து...

Updated On : 1 ஜூலை, 2025 at 7:47 PM
ஹவுஸ்ஃபுல் 5 படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / சஜித் நதியாத்வாலா
பகிர்:
Updated On : 1 ஜூலை, 2025 at 7:21 PM

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் - 5 திரைப்படம் ரூ. 300 கோடியைக் கடந்துள்ளது.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் - இயக்குநர் தருண் மன்சூகானி ஆகியோரின் கூட்டணியில் ஹவுஸ்ஃபுல் - 5 திரைப்படம் உருவானது.

சஜித் நதியாத்வாலா தயாரித்த இந்தப் படத்தில், நடிகர்கள் அபிஷேக் பச்சன், ரித்தேஷ் தேஷ்முக், சஞ்சய் தத், ஜாக்கி ஷெரோஃப், சோனம் பஜ்வா மற்றும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

Advertisement

கடந்த ஜூன் 6 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வந்தது.

Updated On : 1 ஜூலை, 2025 at 7:27 PM

இந்நிலையில், இந்தப் படத்தின் வசூல் உலக அளவில் ரூ.300 கோடியும் இந்திய அளவில் ரூ.200 கோடியும் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 2010-ம் ஆண்டு ஹவுஸ்ஃபுல் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இதைத் தொடர்ந்து, 2012, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில் வரிசையாக வெளியான அடுத்தடுத்த பாகங்களும் வெற்றியடைந்தன.

ஹவுஸ்ஃபுல் 5 படத்தின் வசூல் போஸ்டர். - படம்: எக்ஸ் / சஜித் நதியாத்வாலா

சோனம் பாஜ்வா இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியதும் குறிப்பிடத்தக்கது.

summary

Bollywood actor Akshay Kumar's film Housefull - 5 has crossed Rs. 300 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.