நேரடியாக ஓடிடியில் வெளியான கீர்த்தி சுரேஷின் புதிய படம்!
நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய படம் குறித்து...
கடந்த ஓராண்டாக வெளியாகாமல் இருந்த கீர்த்தி சுரேஷின் உப்பு காப்புரம்பு படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
அனி ஐ.வி.சசி இயக்கிய இந்தப் படம் நேரடியாக அமேசான் பிரைமில் இன்று (ஜூலை 4) வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் சுஹாஸ், சுபலேகா சுதாகர் ஆகியோர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்தப் படத்துக்கு வசந்த் மரிங்கதி கதை எழுதியுள்ளார். இவர் ஏற்கெனவே, சினிமா பண்டி, சுபம் ஆகிய படங்களுக்கும் கதை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
தமிழில் இது என்ன மாயம் படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
கடந்தாண்டு டிசம்பரில் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்தார். அவரது நடிப்பில் கன்னிவெடி, ரிவால்வர் ரீட்டா படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன.