இந்திய அளவில் முதலிடம் பிடித்த மிருணாள் தாக்குரின் படம்!
ஓடிடியில் வரவேற்பைப் பெறும் மிருணாள் தாக்குரின் படம் குறித்து...
நடிகை மிருணாள் தாக்குர், நடிகர் அடிவி சேஷ் நடிப்பில் உருவாகி, ஓடிடியில் வரவேற்பைப் பெறும் டெகாயட் படம் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஷானில் தியோ இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த ஏப்.10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தன.
இந்தப் படம் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியானது. இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், அதுல் குல்கர்னி, ஜயான் மரியா கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
Advertisement
Advertisement
அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் வெளியிட்ட இந்தப் படத்தை சுப்ரியா எர்லாகதா தயாரித்திருந்தார். இந்தப் படத்துக்கு சேஷ் கதை எழுதியிருந்ததும் கவனம் பெற்றது.
திரையரங்குகளில் ரூ.55 கோடி வசூலித்தது. அமேசான் பிரைம் ஓடிடியில் மே.8ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது.
இந்த நிலையில், அமேசான் பிரைம் ஓடிடியில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகை மிருணாள் தாக்குரின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.
Mrunal Thakur Dacoit is trending number 1 in India on amazon prime ott.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.