ஓடிடியில் மெட்ராஸ் மேட்னி!
மெட்ராஸ் மேட்னி திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது...
காளி வெங்கட் நடித்த மெட்ராஸ் மேட்னி திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
நடிகர்கள் சத்யராஜ், காளி வெங்கட் கூட்டணியில் ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் கடந்த ஜூன் 6 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகியது.
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில், கதாநாயகனாக காளி வெங்கட் நடிக்க, சத்யராஜ், ரோஷினி ஹரிப்ரியன், ஜார்ஜ் மரியம், சாம்ஸ், ஷெல்லி, கீதா கைலாசம் மற்றும் பானுபிரியா உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
Advertisement
Advertisement
பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கிய இந்தப் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக, பலரும் தங்களின் பால்ய காலத்தை இப்படம் நினைவுபடுத்தியதாகத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இப்படம் அமேசான் பிரைம் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் இன்று வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: விஜய் சேதுபதி மகனை வாழ்த்திய விஜய்!
madras matinee movie released in amazon prime and sun nxt ott platforms.