முகப்பு
செய்திகள்

மார்வெல் சூப்பர் வில்லன் நடிகர் ஜூலியன் மெக்மஹோன் மரணம்!

பிரபல ஹாலிவுட் நடிகர் மரணமடைந்துள்ளதைப் பற்றி...

Updated On : 5 ஜூலை, 2025 at 10:37 AM
நடிகர் ஜூலியன் மெக்மஹோன்
பகிர்:

மார்வெல் நிறுவனத்தின் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் திரைப்படங்களின் நடிகர் ஜூலியன் மெக்மஹோன் புற்றுநோயால் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல நடிகர் ஜூலியன் மெக்மஹோன் (வயது 56) கடந்த சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 2 ஆம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக, அவரது மனைவி கெல்லி மெக்மஹோன் இன்று (ஜூலை 5) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்வெல் நிறுவனத்தின் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் திரைப்படங்களில், டாக்டர் டூம் எனும் சூப்பர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், நடிகர் ஜூலியன் உலகளவில் ரசிகர்கள் இடையே பிரபலமானார்.

இத்துடன், பல்வேறு திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்துள்ள ஜூலியனின் மரணம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த 1968-ம் ஆண்டு, சிட்ணி நகரத்தில் பிறந்த ஜூலியன் மெக்மஹோன், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் பில்லி மெக்மஹோனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Julian McMahon, the actor from Marvel's Fantastic Four films, has reportedly died of cancer.

முழு கட்டுரையைப் படிக்க →