நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிகை சாரா அர்ஜுன் நடித்துள்ளார். துரந்தர் என்ற பெயரில் தயாராகிவரும் இப்படத்தில், சாரா அர்ஜூன் முதல்முறையாக ஹிந்தியில் நாயகியாக அறிமுகமாகிறார்.
2011-ம் ஆண்டில் வெளியான தெய்வத் திருமகள் படத்தில் நடிகர் விக்ரமின் மகளாக சாரா அர்ஜுன் நடித்திருந்தார். இப்படத்தை ஏ.எல். விஜய் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான சைவம் படத்திலும் சாரா நடித்திருந்தார்.
பின்னர், மணி ரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திலும் இளம் வயது நந்தினியாக நடித்து பலரைக் கவர்ந்தார்.
அவ்வபோது விளம்பரப் படங்களிலும் நடித்து வந்த சாரா, பாலிவுட்டில் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக தற்போது நடித்துள்ளார்.
40 வயதான ரன்வீருக்கு 20 வயதுடைய சாரா நடித்துள்ள நிலையில், விக்ரமிற்கு மகளாக நடித்தவர், தற்போது நாயகியாகவே நடிக்க ஆரம்பித்துவிட்டாரா? என சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். (இப்படத்தின் படப்பிடிப்பின்போது சாராவுக்கு வயது 18)
ஆதித்ய தார் இயக்கியுள்ள இப்படத்தில், மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உட்படப் பலர் நடித்து வருகின்றனர்.
ரன்வீர் சிங் பிறந்தநாளையொட்டி முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சாராவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வாத்தி 2 இல்லை, லக்கி பாஸ்கர் 2 உறுதி..! வெங்கி அட்லூரி பேட்டி!
Actress Sara Arjun is paired opposite to actor Ranveer Singh
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.