ஓடிடியில் துரந்தர்..! தமிழ் உள்பட 3 மொழிகளில் ரிலீஸ்!
நடிகர் ரன்வீர் சிங் நடித்த துரந்தர் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...
நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
ஆதித்யா தார் இயக்கத்தில் திரையரங்கில் வெளியான இந்தத் திரைப் படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1,300 கோடி வசூலித்து அசத்தியது.
பான் இந்திய மொழிகளில் வெளியாகாமல் ஹிந்தியில் மட்டும் திரைக்கு வந்து இந்த இமாலய சாதனை படைத்ததால் இந்திய திரைத்துறையினர் ஆச்சரியமடைந்தனர்.
Advertisement
Advertisement
நடிகர்கள் மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
பாகிஸ்தானுக்கு உளவாளியாகச் செல்லும் ரன்வீர் சிங்கின் நடிப்பு பாராட்டப்பட்டது. இருப்பினும் அரசியல் ரீதியாக இந்தப் படத்துக்கு கடுமையான விமர்சனங்கள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.
The film 'Dhurandhar', starring actor Ranveer Singh, has been released on the Netflix OTT platform.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.