தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு மீண்டும் பெண் குழந்தை!
தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.
தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.
பாலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதியான தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு செப். 8 2024 -இல் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘துவா’ எனப் பெயரிட்டனர்.
துவாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், தீபிகா படுகோன் இரண்டாவது முறையாக கருவுற்று இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
தீபிகா படுகோனும், ரன்வீர் சிங்கும் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த மகிழ்ச்சிச் செய்தியைப் பகிர்ந்திருந்தனர். அப்பதிவில், கருவுற்று இருப்பதை பரிசோதனை செய்யும் சாதனத்தை தீபிகாவின் மகள் துவா கையில் பிடித்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தனர்.
இந்த நிலையில், ரன்வீர் - தீபிகா தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளதாக சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதுமுள்ள திரைத்துறையினர் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ரன்வீர் சிங் ‘துரந்தர் 2’ வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் நிலையில், நடிகை தீபிகா படுகோன் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ‘ராக்கா’ என்ற படத்தில் நடித்துவருகிறார்.
Deepika Padukone and Ranveer Singh have welcomed their second baby girl.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.