எல். முருகன் ராஜிநாமா செய்த மாநிலங்களவை எம்.பி. தொகுதி பாஜக வேட்பாளராக ஹர்தீப் சிங்!
எல். முருகன் ராஜிநாமா செய்த மாநிலங்களவை உறுப்பினர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
எல். முருகன் ராஜிநாமா செய்த மாநிலங்களவை உறுப்பினர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி (74) அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் தகவல், ஒளிபரப்புத் துறை இணை அமைச்சராக இருந்த எல். முருகன், கடந்த 13 ஆம் தேதி மத்திய அமைச்சரவை மற்றும் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகனின் பதவிக்காலம் வரும் 2030-ஆம் ஆண்டு ஏப். 2-ஆம் தேதி வரை இருக்கும் நிலையில், அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த அக். 23 ஆம் தேதி வெளியிட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், எல். முருகன் ராஜிநாமா செய்த மாநிலங்களவை உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி களமிறக்கப்பட்டுள்ளார்.
உத்திரப்பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஹர்தீப் சிங் புரியின் தற்போதைய மாநிலங்களவை பதவிக்காலம் வரும் நவ. 25 உடன் முடிவடைகிறது.
Union Minister Hardeep Singh Puri has been announced as the BJP candidate for the by-election to the Rajya Sabha seat vacated by L. Murugan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.