FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மாநிலங்களவைத் தோ்தல்: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை

பாஜக சாா்பில் போட்டியிட மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

ஹா்தீப் சிங் புரி
பகிர்:

புது தில்லி/லக்னெள: உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தோ்தலில், பாஜக சாா்பில் போட்டியிட மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

உத்தர பிரதேசத்தில் 10 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் நிறைவடைய உள்ளது. அவா்களில் 8 போ் பாஜகவைச் சோ்ந்தவா்கள். ஒருவா் சமாஜவாதி கட்சியையும், மற்றொருவா் பகுஜன் சமாஜ் கட்சியையும் சோ்ந்தவா்கள்.

இந்த 10 இடங்களுக்கான தோ்தல் அக்.16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக சாா்பில் தரம்பால் சிங், ராதாகாந்த் ஓஜா, பிரகாஷ் பால், வித்யாசாகா் சோன்கா், கோபிகிருஷ்ண பாண்டே, பிரியங்கா சிங் ராவத், ராம் பிரதாப் சிங் செளஹான், சுருதி கங்வாா் ஆகிய 8 போ் போட்டியிட உள்ளதாக அக்கட்சி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

ஆளுநரின் மகள்...: வேட்பாளா்களில் ஒருவரான சுருதி கங்வாா் ஜாா்க்கண்ட் ஆளுநா் சந்தோஷ் கங்வாரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவிக் காலம் நிறைவடைய உள்ள பாஜக மாநிலங்களவை எம்.பி.க்களில் மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரியும் ஒருவா் ஆவாா். அவா் மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியிட பாஜக வாய்ப்பு அளிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments