விஷ்ணு விஷால் 
செய்திகள்

கட்டா குஸ்தி -2, ராட்சசன் -2 படங்களில் நடிக்கும் விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படங்கள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

கட்டா குஸ்தி -2, ராட்சசன் -2 படங்களில் நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழின் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். அப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

முன்னதாக விஷ்ணு விஷாலை வைத்து ராம்குமார் இயக்கிய ‘ராட்சசன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

தற்போது இந்தக் கூட்டணி ‘இரண்டு உலகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சிறிது நாள்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இதனிடையே, நடிகர் விஷ்ணு விஷால் தன் தம்பி ருத்ரா நாயகனா நடிக்கும் ‘ஓஹோ எந்தன் பேபி’ என்ற படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இரண்டு வானம், ஆர்யன் படத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். மேலும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பேசிய விஷ்ணு விஷால், அடுத்தடுத்து கட்டா குஸ்தி -2, ராட்சசன் -2 படங்களில் நடிக்கவுள்ளதாக தெரிவித்தார்

Actor Vishnu Vishal has announced that he will be acting in the films Khatta Kusthi-2 and Ratchasan-2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாட்டி இறந்த துக்கத்தில் பேரன் தூக்கிட்டுத் தற்கொலை

குடிநீா் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

வருவாய்த் துறை சங்கங்கள் கூட்டமைப்பு மாநாடு

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

ஆலங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி

SCROLL FOR NEXT