முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் சின்ன திரை நாடகங்களில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2000 முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஒளிப்பரப்பான சின்ன திரை நாடகமான ”க்யூன்கி சாஸ் பி கபி பஹு தி” எனும் நாடகத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட துல்சி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சின்ன திரை நாடகங்கள் மட்டுமின்றி சில திரைப்படங்கள் மூலம் ஹிந்தி மொழி பேசும் மக்களிடையே நடிகை ஸ்மிருதி இரானி பிரபலமானவராக அறியப்பட்டார்.
கடந்த 2003-ம் ஆண்டு பாஜக-வில் இணைந்த அவர், 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றார். அதன்பின்னர், திரை மற்றும் சின்ன திரையில் நடிப்பதை நிறுத்தியிருந்தார்.
இந்நிலையில், ”க்யூன்கி சாஸ் பி கபி பஹு தி” நாடகத்தின் 2-ம் பாகத்தின் மூலம் நடிகை ஸ்மிருதி இரானி மீண்டும் சின்ன திரை நாடகங்களில் நடிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், அவரது ரசிகர்களிடையே மிகப் பெரியளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு அமேதி தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரான அவர் 2024-ம் ஆண்டு வரை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகச் செயலாற்றி வந்தார்.
இருப்பினும், 2024 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட அவர் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் ஷர்மாவிடம் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.