ஜப்பானிய மொழியில் வெளியான மாவீரன் போஸ்டர்.  படம்: ஷாந்தி டாக்கீஸ்.
செய்திகள்

ஜப்பானில் வெளியான மாவீரன் திரைப்படம்! எஸ்கே ரசிகர்கள் உற்சாகம்!

சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் ஜப்பானில் வெளியாவது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் ஜப்பானில் வெளியாகியிருக்கிறது.

மண்டேலா திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படம் கடந்த 2023-இல் வெளியானது.

விமர்சன ரீதியாகவும் கமர்ஷியலாகவும் மாபெறும் வெற்றிப் பெற்ற படமாக மாவீரன் மாறியது.

இந்தப் படத்தில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படம் ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது.

இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுத்திருப்பார். மிஷ்கின் வில்லனாக அசத்தியிருப்பார்.

ஷாந்தி டாக்கீஸ் தயாரித்த இந்தப்படம் தற்போது ஜப்பானில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஷாந்தி டாக்கீஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் நேற்றிரவு, “மாவீரன் நாளை முதல் ஜப்பான் மக்களின் மனதை வெல்ல தயாரானான்” எனக் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, இன்றுமுதல் ஜப்பானில் மாவீரன் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இதனால், சிவகார்த்திகேயன் (எஸ்கே) ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளார்கள்.

The film Maveeran, starring actor Sivakarthikeyan, has been released in Japan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT