அமீருடன் பாவனி படம் - இன்ஸ்டாகிராம்
செய்திகள்

திருமணத்துக்குப் பிறகு கணவரின் பிறந்த நாளைக் கொண்டாடிய பாவனி!

சின்ன திரை நடிகை பாவனி, திருமணத்துக்குப் பிறகான தனது கணவரின் முதல் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடியுள்ளார்

இணையதளச் செய்திப் பிரிவு

சின்ன திரை நடிகை பாவனி, திருமணத்துக்குப் பிறகான தனது கணவரின் முதல் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடியுள்ளார். இதனையொட்டி உணர்வுப்பூர்வமாக அவர் பதிவிட்டுள்ளார்.

திருமணத்துக்கு முன்பு காதலர்களாக பல பிறந்தநாள்களை இருவரும் கொண்டாடியிருந்தாலும், திருமணத்துக்குப் பிறகு கணவன் - மனைவியாக முதல்முறை பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதலர்களான நடிகை பாவனி - நடன இயக்குநர் அமீர் ஜோடி, நிஜ வாழ்க்கையிலும் சிறந்த தம்பதிகளாக மாறியுள்ளனர்.

அமீரின் பிறந்தநாளையொட்டி பாவனி பதிவிட்டுள்ளதாவது,

''என்னுடைய காதலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். என்னுடைய கணவராக, அம்மாவாக, அப்பாவாக, மருத்துவராக, அடிப்படையில் தனிப்பட்ட சமையல் கலைஞராக இருப்பதற்கு நன்றிகள். நீ ஒரு முழு நேரக் குழந்தையை திருமணம் செய்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளாய். என்றும் எனக்குள் இருப்பாயாக'' எனப் பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் காதல்

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகப் பங்கேற்ற பாவனியிடம், வைல்டுகார்ட் மூலம் போட்டியில் நுழைந்த அமீர், தனது காதலை அச்சமின்றி வெளிப்படுத்தினார்.

பிக் பாஸ் டிஆர்பிக்காக இவ்வாறு செய்யப்படுகிறது என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், நிகழ்ச்சிக்கு பின்னரும் பாவனி மீது அதே அளவு அமீர் காதல் கொண்டிருந்தார்.

நடன நிகழ்ச்சியில்...

ரியாலிடி நிகழ்ச்சி மேடையில் அமீர் வெளிப்படுத்திய காதலை பாவனி ஏற்றுக்கொண்டார். தங்கள் வாழ்வின் அடுத்தகட்டத்தை நோக்கி முடிவெடுக்கும் தருணத்தில் இருவரும் நெகிழ்ச்சியாக அந்த மேடையைப் பகிர்ந்துகொண்டனர்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில், இருவரும் கொண்டிருந்த அன்பு மற்றும் முறையான பயிற்சியின் மூலம் அந்த நிகழ்ச்சியின் வெற்றி பெற்ற ஜோடியானார்கள்.

இதனால் திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் இருவரின் காதலுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைத்தது. இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் திருமணம் நடைபெற்றது.

இதையும் படிக்க | காதலியை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகர்!

serial actress paavani celebrated her husband amirs first birthday after marriage.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் வியூகம் வெற்றி பெறுமா? - அா்ஜுன் சம்பத்

மீட்புப் பணி போட்டி: முதலிடம் பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு

இளைஞா் கொலை வழக்கு: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

அரையிறுதியில் ஜோகோவிச் - அல்கராஸ் பலப்பரீட்சை

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை

SCROLL FOR NEXT