தலைவன் தலைவி பட போஸ்டர். 
செய்திகள்

தலைவன் தலைவி படத்தின் டிரைலர் அறிவிப்பு!

தலைவன் தலைவி படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு நடிப்பில் தலைவன் தலைவி படம் உருவாகியுள்ளது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

காதல் கதையாக உருவாகியுள்ள தலைவன் தலைவி படம் வரும் ஜூலை 25ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் முதல் பாடலாக வெளியான பொட்டல மொட்டாயே என்ற பாடல் இணையத்தில் வைரலானதுடன், தற்போதுவரை 1.29 கோடி பேர் பார்த்துள்ளனர்.

இப்படம் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்று விஜய்சேதுபதி முன்னதாகத் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தலைவன் தலைவி படத்தின் டிரைலர் நாளை(ஜூலை 17) வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுகை, பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின்தடை

குட்டையில் தவறி விழுந்து உயிரிழப்பு

கோயில் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு

காரில் கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது இரு பெண்கள் மீது வழக்குப் பதிவு

புறவழிச்சாலையில் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT