முகப்பு
செய்திகள்

கர டிரைலர் எப்போது?

கர திரைப்படத்தின் டிரைலர் குறித்து...

Updated On : 5 ஏப்ரல் 2026, 11:12 am IST
தனுஷ்
பகிர்:

தனுஷ் நடித்த கர திரைப்படத்தின் டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர திரைப்படம் வருகிற ஏப். 30 ஆம் தேதி வெளியாகிறது. போர் தொழில் படம் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார்.

நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ், ஜெயராம், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது.

Advertisement

Advertisement

1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த சம்பவம் ஒன்றை மையமாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை வருகிற ஏப். 19 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய நாளிலேயே படத்தின் இசை வெளியிட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாம்.

summary

reports suggests kara movie trailer will out on apr 19

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.