நடிகர் ரஜினிகாந்த், தனது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களின் அடிப்படையில், அவரது சுயசரிதையை எழுதி வருவதாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம், வரும் ஆகஸ்ட் மாதம் 14-ல் திரையரங்குகளில் வெளியாகின்றது.
இந்நிலையில், தனியார் ஊடகத்துக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில், கூலி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின்போது அவரது சுயசரிதையை எழுதுவதில் நடிகர் ரஜினிகாந்த் தீவிரமாக ஈடுபட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், படப்பிடிப்பின்போது நாள்தோறும் நடிகர் ரஜினிகாந்திடம், அவரது சுயசரிதையில் எந்த அத்தியாத்தைத் தற்போது எழுதி வருகிறார், என கேட்டுத் தெரிந்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, நடிகர்கள் சத்யராஜ், சௌபின் சாஹிர், நாகார்ஜுனா, உபேந்திரா ஆகியோரின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் “கூலி” திரைப்படம் உருவாகியுள்ளது.
இதில், இப்படம் சுமார் 100 நாடுகளின் திரையரங்குகளில் வெளியாகக் கூடும் எனவும், வணிக ரீதியாக பல சாதனைகளைச் செய்யலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஒரே நாளில் வெளியான சக்தித் திருமகன் படத்தின் 2 பாடல்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.