ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம். 
செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

3 பிஎச்கே 

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான 3பிஎச்கே திரைப்படத்தில் சித்தார்த், சரத் குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

3 பிஎச்கே திரைப்படம் சிம்பிளி சௌத், அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் நாளை (ஆகஸ்ட் 1) வெளியாகின்றன.

தம்முடு

வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் நித்தின் நாயகனாக நடித்து வெளியான தம்முடு திரைப்படத்தில் நாயகியாக சப்தமி கெளடா நடித்திருந்தார். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

கட்ஸ்

ரங்கராஜ், நான்சி, ஸ்ருதி நாரயணன் உள்ளிட்டோர் நடிப்பில், அறிமுக இயக்குநர் ரங்கராஜ் இயக்கத்தில் வெளியான கட்ஸ் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் நாளை காணலாம்.

சுரபில் சுந்தர ஸ்வப்னம்

தோனி மேத்யூ இயக்கத்தில் வெளியான சுரபில் சுந்தர ஸ்வப்னம் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை பார்க்கலாம். இப்படத்தில் சோனி சோஜன், குங்பூ சஞ்சு, ஸ்டெபின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சக்ரவ்யூஹம்: தி ட்ராப்

இயக்குநர் சேத்குரி மதுசூதனன் இயக்கத்தில் கிரைம், த்ரில்லர் படமாக வெளியான சக்ரவ்யூஹம்: தி ட்ராப் திரைப்படம் நாளை ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகிறது.

ஜின் தி பெட்

முகின் ராவ் நடிப்பில் தமிழில் வெளியான ஜின் தி பெட் திரைப்படம், தெலுங்கு மொழியில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை பார்க்கலாம்

கடந்த வாரம் வெளியான படை தலைவன் திரைப்படத்தை ஆஹா தமிழிலும், ரோந்த் திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டாரிலும், மார்கன் திரைப்படத்தை அமேசான் பிரைமிலும் காணக் கிடைக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT