செய்திகள்

சசிகுமாரின் ஃப்ரீடம் டீசர்!

ஃப்ரீடம் படத்தின் டீசர் வெளியானது...

DIN

நடிகர் சசிகுமார் நடித்த ஃப்ரீடம் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ள இப்படத்திற்கு 'ஃப்ரீடம் ஆகஸ்ட் - 14’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இப்படம் தமிழகத்தில் 1990-களில் நடந்த ஜெயில் உடைப்பு சம்பவம் குறித்த உண்மைக் கதைகளைத் தொட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், சசிகுமாரும் லிஜோமோல் ஜோஸும் இலங்கை அகதிகளாக நடித்திருக்கின்றனர்.

இப்படம் ஜூலை 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் சந்திக்கும் பிரச்னைகள் காட்டப்படுவதால் படம் அரசியல் ரீதியாகவும் சில விஷயங்களைப் பேசலாம் எனத் தெரிகிறது.

டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றிக்குப் பின் வெளியாகும் சசிகுமார் படமென்பதால் ஃப்ரீடம் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இல.கணேசன் மறைவு: மணிப்பூர் ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு!

புதுத் திருப்பம்... அங்கிதா ஷர்மா!

சேலை சோலை.... அனன்யா நாகெல்லா

கமகம... சைத்ரா ஆச்சார்!

மேகம் அல்ல... பேர்லே மானே

SCROLL FOR NEXT