முகப்பு
செய்திகள்

தக் லைஃப் சிறப்பு போஸ்டர்!

தக் லைஃப் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 2 ஜூன், 2025 at 11:38 AM
தக் லைஃப் போஸ்டர் - X
பகிர்:

தக் லைஃப் திரைப்படம் வெளியாக மூன்று நாள்களே உள்ள நிலையில், சிறப்பு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி என பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

இப்படத்தைத் திரையரங்குகளில் காண்பதற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகள் நேற்று அதிகாலை துவங்கி நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், படம் வெளியாக மூன்று நாள்களே உள்ளதை குறிக்கும் வகையில் சிறப்பு போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.