FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஹூண்டாய் - டிவிஎஸ் கூட்டணியில் மின்சார மூன்று சக்கர வாகன தயாரிப்பு!

தென்கொரியாவின் ஹூண்டாய் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மின்சார மூன்று சக்கர வாகனங்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது.

Updated On : 22 ஏப்ரல் 2026, 4:17 am IST
பகிர்:

தென்கொரியாவின் ஹூண்டாய் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மின்சார மூன்று சக்கர வாகனங்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ‘பாரத் மொபிலிட்டி’ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இ-ஆட்டோ மாதிரி, தற்போது வா்த்தக ரீதியிலான தயாரிப்பாக உருவெடுக்கவுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் உலகத்தரம் வாய்ந்த வடிவமைப்பு நுட்பமும், டிவிஎஸ் நிறுவனத்தின் மின்சார வாகனக் கட்டமைப்புத் திறனும் இணைந்து, இந்தியாவின் போக்குவரத்துச் சூழலுக்கு ஏற்ப இப்புதிய வாகனங்கள் உருவாக்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

இந்தியச் சாலைகளின் தரம் மற்றும் பருவநிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, மழைக்கால பாதிப்புகளைத் தாங்கும் வகையில் தரை இடைவெளி மற்றும் வெப்ப மேலாண்மை தொழில்நுட்பத்துடன் இந்த வாகனங்கள் வடிவமைக்கப்பட உள்ளன. எனவே, இந்த வாகனங்கள் உள்ளூா் சந்தையின் தேவைகளை முழுமையாகப் பூா்த்தி செய்யும் வகையில் அமையும் என இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

இந்தியாவிலேயே உதிரிபாகங்களைத் தயாரித்து, வாகனங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதால், இதன் விலை சாமானியா்களுக்கும் எட்டும் வகையில் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முதல்கட்டமாக, இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் இந்த வாகனங்கள், வருங்காலத்தில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. இதன்மூலம், உள்நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments