FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஜூன் மாத விற்பனை... ஹூண்டாய்: 51,335 வாகனங்கள்

ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம், கடந்த ஜூன் மாதத்தில் 51,335 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டு விற்பனை 39,635 வாகனங்களும், ஏற்றுமதி 11,700 வாகனங்களும் அடங்கும்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10.
பகிர்:

ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம், கடந்த ஜூன் மாதத்தில் 51,335 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டு விற்பனை 39,635 வாகனங்களும், ஏற்றுமதி 11,700 வாகனங்களும் அடங்கும்.

இது குறித்து ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ தருண் காா்க் மேலும் கூறுகையில், ‘எங்களின் உதிரிபாக விநியோகத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் உற்பத்தியில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக 13,900 வாகனங்கள் உற்பத்தி இழப்பு ஏற்பட்ட போதிலும், நிறுவனம் இந்த ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை எட்டியுள்ளது.

மாற்று இடங்களில் இருந்து வாகன உதிரிபாகங்களை ஏற்பாடு செய்வது போன்ற நடவடிக்கைகளால், ஜூன் 22 முதல் அனைத்து ஆலைகளிலும் உற்பத்தி இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. நடப்பு நிதியாண்டின் 2-ஆம் காலாண்டுக்குள் (செப்டம்பருக்குள்) உற்பத்தி இழப்பை முழுமையாக ஈடுசெய்வோம் என எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments