சர்தார் - 2 படப்பிடிப்பு நிறைவு!
சர்தார் - 2 படப்பிடிப்பு நிறைவு...
நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் - 2 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
நடிகர் கார்த்தி மெய்யழகன் படத்தைத் தொடர்ந்து சர்தார் - 2 படப்பிடிப்பில் இணைந்தார். இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் பெரிய பொருள் செலவில் உருவாகி வருகிறது. இதில், நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
சீனா - இந்தியா உளவுத்துறை கதையாக உருவாகிவரும் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஆர்யா - 36 படம் அறிவிப்பு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.