செய்திகள்

வாடிவாசல் கைவிடப்படுகிறதா? தயாரிப்பாளர் பதில்!

வாடிவாசல் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியுள்ளார்...

DIN

சூர்யா - வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியுள்ளார்.

நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் வாடிவாசல் திரைப்படம் உருவாகவுள்ளது. மறைந்த எழுத்தாளர் சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலைத் தழுவியே இப்படம் உருவாகிறது.

கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதல்கட்ட பணிகள் ஆரம்பமானதும் ஜூன் மாதம் படப்பிடிப்பும் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இதனால், சூர்யா இயக்குநர் வெங்கட் அட்லுரி படத்தில் இணைந்தார். மேலும், வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் வதந்திகள் பரவின.

இந்த நிலையில், இதுகுறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் தாணு, “வாடிவாசல் படத்திற்கான அனிமேஷன் பணிகள் முடிந்ததும் படப்பிடிப்பு கண்டிப்பாக துவங்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாம்பாறு அணையிலிருந்து 800 கனஅடி உபரிநீா் வெளியேற்றம்

வீட்டுச்சுவா் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

கண்ணுமுழி பாடல்!

நிதி மோசடியில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT