முகப்பு
செய்திகள்

நாடு முழுக்க புரமோஷன் செய்தும் தக் லைஃப் வசூல் இவ்வளவுதானா?

தக் லைஃப் வசூல் குறித்து....

Updated On : 8 ஜூன், 2025 at 4:15 PM
பகிர்:

நடிகர் கமல் ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் வியாழக்கிழமையன்று (ஜுன். 5) வெளியானது.

ஆனால், படம் ரசிகர்களிடம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றதால் வணிக ரீதியாக தோல்வியடையும் என்றே கணிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்த நிலையில், இப்படம் இந்தியளவில் இதுவரை ரூ. 30 கோடிதான் வசூலித்திருக்கிறதாம். கமல்ஹாசன், சிம்பு இருவரும் இணைந்து நடித்தும் தக் லைஃப் வசூலை ஈட்டத் திணறியது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ. 180 கோடி பட்ஜெட்டில் உருவாகி தோல்வியைச் சந்தித்த இப்படம் மணிரத்னத்துக்கும் மோசமான விமர்சனங்களைப் பெற்றுத் தந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.