முகப்பு
செய்திகள்

கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா பட அப்டேட்!

நடிகை கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா பட அப்டேட் குறித்து...

Updated On : 10 ஜூன், 2025 at 8:06 PM
ரிவால்வர் ரீட்டா போஸ்டர். - படம்: தி ஃபேஷன் ஸ்டூடியோஸ்
பகிர்:
Updated On : 10 ஜூன், 2025 at 7:45 PM

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் அப்டேட் நாளை வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படம் தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜேகே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்தது.

Advertisement

நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பெயர் டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.

Updated On : 10 ஜூன், 2025 at 7:48 PM

கதைநாயகியாக ரகு தாத்தா படத்தில் சரிவைக் கண்டதால் ரிவால்வர் ரீட்டாவின் வெற்றிக்காகக் காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில், படத்தின் முக்கியமான அப்டேட் நாளை (ஜூன்.11) வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்டநாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் செய்தார்.

திருமணத்துக்குப் பிறகு வெளியாகும் முதல்படமாக ரிவால்வர் ரீட்டா இருக்கிறது.

ரிவால்வர் ரீட்டா போஸ்டர். - Passion Studios

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.