செய்திகள்

ஸ்டார்ட் மியூசிக் சீசன் - 6: ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

ஸ்டார்ட் மியூசிக் சீசன் - 6 நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி குறித்து...

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் 6வது சீசன் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

5  சீசன்களின் வெற்றிக்குப் பிறகு, 'ஸ்டார்ட் மியூசிக்'  நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பிப் பார்க்கின்றனர்.

இந்நிகழ்ச்சியின் 4 சீசன்களை தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கினார். மூன்றாவது சீசனை மட்டும் மா.கா.பா. ஆனந்த் தொகுத்து வழங்கினார்.

ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பாடல்கள் குறித்து கேள்வி கேட்கப்படும். இதில் சினிமா, தொலைக்காட்சி பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.

பாடல்களை மையப்படுத்தி இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுவதால், இசை ரசிகர்கள் மத்தியில் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்துள்ளது.

இந்த புதிய சீசனை பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கவுள்ள நிலையில், அதற்கான ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது. அதில், ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி ஜூன் 15 ஆம் தேதி முதல் ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

விஜய் தொலைக்காட்சியில் நட்சத்திர தொகுப்பாளராக வலம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு வசி என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.

அவருடைய திருமணத்துக்குப் பிறகு பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சி 'ஸ்டார்ட் மியூசிக் - 6' என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கண்மணி - அஷ்வத் தம்பதிக்கு குழந்தை பிறந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT