ரிவால்வர் ரீட்டா ரிலீஸ் தேதி!
நடிகை கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படம் தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ளது.
சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜேகே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்தது.
Advertisement
நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பெயர் டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.
கதைநாயகியாக ரகு தாத்தா படத்தில் சரிவைக் கண்டதால் ரிவால்வர் ரீட்டாவின் வெற்றிக்காகக் காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில், இந்தப் படம் ஆக.27ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்டநாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் செய்தார்.
திருமணத்துக்குப் பிறகு வெளியாகும் முதல்படமாக ரிவால்வர் ரீட்டா இருக்கிறது.