இசையமைப்பாளர் டி. இமான் 
செய்திகள்

சென்னையில் இமானின் இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு! ஏன்?

பிரபல இசையமைப்பாளர் இமானின் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னையில் நடைபெறவிருந்த இசையமைப்பாளர் டி. இமானின் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விருது வென்ற பிரபல இசையமைப்பாளர் இமானின் இசைநிகழ்ச்சி, ஜூன் 14 ஆம் தேதியன்று, நந்தனம் வொய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த தேதியில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சிக்கான புதிய தேதியானது விரைவில் அறிவிக்கப்படும் என்றும், விற்பனையான டிக்கெட்டுகள் அனைத்தும் புதிய தேதியன்று செல்லுபடியாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், டிக்கெட்டுகளுக்கான பணத்தைத் திரும்பப் பெற விரும்பும் ரசிகர்கள் இன்று (ஜூன் 12) முதல் அடுத்த 7 நாள்களுக்குள் முழுவதுமாகத் திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சிம்பு - வெற்றி மாறன் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலைக்கிராமப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

கிணற்றில் கழிவுகளைக் கொட்ட வந்த பல்லடம் நகராட்சி லாரி சிறைபிடிப்பு

புதிய வாடிக்கையாளா்கள்: ஏா்டெல்லை பின்னுக்குத் தள்ளிய பிஎஸ்என்எல்!

வெள்ளிச்சந்தை பகுதியில் அக். 22-இல் மின்தடை

கஞ்சா பதுக்கி வைத்திருந்தவா் கைது

SCROLL FOR NEXT