செய்திகள்

குஜராத் விமான விபத்து! குபேரா முன்வெளியீடு ஒத்திவைப்பு!

நடிகர் தனுஷின் குபேரா படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சி ஒத்திவைப்பு

DIN

நடிகர் தனுஷின் குபேரா படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனாவும் நடிகர் தனுஷும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளதால் குபேரா மீதான எதிர்பார்ப்பு தமிழ், தெலுங்கு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ரூ. 120 கோடி பட்ஜெட்டில், சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். ஜூன் 20 ஆம் தேதியில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் இன்று (ஜூன் 13) வெளியிடப்படவுள்ளது.

இந்த நிலையில், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தால், குபேரா படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சி தேதி மாற்றியமைக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்தது.

அகமதாபாத் விமான விபத்தில் 241 பயணிகள் பலியான நிலையில், திரைப்படத்தை வெளியிடுவது கலாசாரத்துக்கு ஏற்றதாகவோ நாகரிகமானதோ அல்ல என்ற கருத்துகளும் வலம் வருவதால், குபேரா வெளியீடு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இதுகுறித்த தகவல்கள் எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகியும் வருகிறது.

இதனிடையே, அமெரிக்காவில் இதுவரையில் குபேரா படத்தின் 956 டிக்கெட்டுகள் விற்கப்பட்டு, 17,013 டாலர் (ரூ. 14.65 லட்சம்) வசூலாகி இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இதையும் படிக்க: ஹீரோவாக மிளிரும் சண்முக பாண்டியன்! ஆனால் கதை..? படைத்தலைவன் : திரை விமர்சனம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT