திறமையின் ஆற்றல் நிலையம் ஜி.வி.பிரகாஷ்..! பிறந்தநாளுக்கு இயக்குநர் வாழ்த்து!
நடிகர் ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாளில் வெளியான போஸ்டர் குறித்து...
நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் பிறந்த நாளில் இம்மார்ட்டல் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் கயாது லோஹர் நாயகியாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இந்தப் படத்தை இயக்குகிறார்.
இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இவரது நடிப்பில் 25ஆவது படமாக வெளியான கிங்ஸ்டன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஏகே ஃபிலிம் ஃபேக்டரி இந்தப் படத்தை தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
இந்நிலையில், மாரியப்பன் சின்னா புதிய போஸ்டரை பகிர்ந்து கூறியதாவது:
திறமையின் ஆற்றல் நிலையமான ஜி.வி.பிரகாஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மறக்க முடியாத இசைத்துணுக்குகளும் குறிப்பிடத்தக்க நடிப்பும் காத்திருக்கின்றன. இம்மார்டல் படக்குழு சார்பாக வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.