நம் நாட்டின் மிகப்பெரிய பட்ஜெட் படம் இதுதான்: அட்லி
அட்லி தன் புதிய படத்தின் பட்ஜெட் குறித்து பேசியுள்ளார்...
அல்லு அர்ஜுன் படத்தின் பட்ஜெட் குறித்து அட்லி பேசியுள்ளார்.
புஷ்பா - 2 படத்தின் இமாலய வெற்றிக்குப் பின் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிக்கிறார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிகை தீபிகா படுகோன் இணைந்ததை விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
Advertisement
படம் முழுக்க முழுக்க ஃபேண்டசி பாணியில் உருவாகவுள்ளதால் படப்பிடிப்பிலும் பல விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது. படப்பிடிப்பு மும்பையில் துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இன்று சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குநர் அட்லிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
பட்டம் பெற்றபின் நிகழ்வில் பேசிய அட்லி, “நானும் நடிகர் அல்லு அர்ஜுனும் இணைந்த திரைப்படம் இந்த நாட்டின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகவுள்ளது. உலகின் தலைசிறந்த தொழில்நுட்பங்களை இப்படத்தில் பயன்படுத்துகிறேன். இதற்கு எவ்வளவு செலவாகும் என்பதே இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், இந்தப் படம் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: குபேராவின் கதையைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்: நாகர்ஜுனா