அனுஷ்கா 
செய்திகள்

கைதி - 2 படத்தில் அனுஷ்கா?

கைதி - 2 படத்தில் அனுஷ்கா இணைந்ததாகத் தகவல்...

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கைதி - 2 படத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவான கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது. இப்படத்திற்குப் பின்பே லோகேஷ் கனகராஜ் பிரபலமடைந்தார். தொடர்ந்து, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார்.

தற்போது, நடிகர் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

கைதி திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படவுள்ளது.

இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவுள்ள நிலையில், செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகை அனுஷ்கா இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுஷ்கா தற்போது காதி என்கிற கேங்ஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

ஒருவேளை கைதி - 2 படத்தில் அனுஷ்கா இணைந்தால் இப்படத்தில் பெண் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு சென்ற காரில் தீ: 4 போ் தப்பினா்

பறிமுதல் வாகனங்கள் ஆக.25-ல் பொது ஏலம்!

வாசுதேவநல்லூா்: விபத்தில் காயமடைந்த முதியவா் பலி!

சநாதனம் ஒற்றுமையையே வலியுறுத்துகிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

இந்திய குத்துச்சண்டை அணிகள் சீனா பயணம்

SCROLL FOR NEXT