செய்திகள்

மீண்டும் சென்சார் செய்யப்பட்ட குபேரா... ஏன்?

குபேரா படம் மீண்டும் சென்சார் செய்யப்பட்டுள்ளது...

DIN

நடிகர் தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் மீண்டும் சென்சார் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனாவும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளதால் குபேரா மீதான எதிர்பார்ப்பு தமிழ், தெலுங்கு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

ரூ. 120 கோடி பட்ஜெட்டில், சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். படம் ஜூன் 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

சில நாள்களுக்கு முன் இப்படத்தை சென்சார் செய்தனர். அதன்படி, யு/ஏ சான்றிதழுடன் 3.15 மணி நேரம் கால அளவு கொண்ட படமாக இருந்தது.

ஆனால், படத்தின் நீளம் ரசிகர்களிடம் சோர்வை ஏற்படுத்தலாம் என்பதால் 3.01 மணி நேரமாகக் குறைத்து மீண்டும் படத்தைத் தயாரிப்பு நிறுவனம் சென்சார் செய்துள்ளனர். இதுவே, இறுதி வடிவமாக இருக்கும் எனத் தெரிகிறது.

இதையும் படிக்க: கைவிடப்படும் மார்கோ - 2!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கால் பாதிப்பு!

வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்!

பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு - தீர்மானம் நிறைவேற்றம்!

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: சூழல் சுற்றுலாத் தளம் இன்று மூடல்!

அலெஹாந்த்ரோ இனாரிட்டு அழைத்தும் வாய்ப்பை மறுத்த ஃபஹத்! ஏன்?

SCROLL FOR NEXT