சந்தானம், சிம்பு 
செய்திகள்

கைவிடப்பட்ட சிம்பு - 49! ஏன்?

எஸ்டிஆர் - 49 படம் கைவிடப்பட்டதாகத் தகவல்...

DIN

நடிகர் சிம்பு - இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் திரைப்படம் கைவிடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சிலம்பரசனின் 42-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 49-ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது.

’பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பில் இப்படம் உருவாக இருந்தது.

இதில் சிம்பு கல்லூரி மாணவராகவும் நீண்ட காலம் கழித்து சந்தானம் காமெடியனாகவும் நடிக்க ஒப்பந்தமானது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஆனால், தற்போது இப்படம் கைவிடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் இருப்பதால் படத்தின் தயாரிப்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

அதேநேரம், நடிகர் சந்தானம் தனக்கான நகைச்சுவைக் காட்சிகளை மாற்றி நாயகனுக்கு இணையான காட்சிகளை எழுதச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. கதாபாத்திர வடிவமைப்பில் சிம்புவுக்கும் சந்தானத்திற்கும் சிறிய பூசல் ஏற்பட்டதாம்.

இதனால், இப்படத்திலிருந்து விலகிய சிம்பு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். சிம்புக்காக நீண்ட நாள் காத்திருந்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்போது வேறு ஹீரோவிடம் கதையைக் கூறி வருகிறாராம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

கூலி டிரெய்லர்!

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

SCROLL FOR NEXT