ரேஷ்மா பசுபுலேட்டி 
செய்திகள்

ரேஷ்மா பசுபுலேட்டி நாயகியாக நடிக்கும் புதிய தொடர்!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் புதிய தொடரின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

DIN

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் புதிய தொடரின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தெலுங்கில் மகுவா ஓ மகுவா என்ற பெயரில் ஒளிபரப்பான வெற்றித் தொடர், தமிழில் மறுஉருவாக்கம் செய்யப்படுகிறது.

இன்னும் பெயர் அறிவிக்கப்படாத இத்தொடரில் ரேஷ்மா முதன்மை பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவருடன் வர்ஷினி சுரேஷ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.

வர்ஷினி சுரேஷ்

இதில், ரேஷ்மா மாமியார் பாத்திரத்திலும் வர்ஷினி மருமகள் பாத்திரத்திலும் நடிக்கின்றனர். மற்றத் தொடர்களைப் போன்று மாமியார்களை இரக்கமற்ற பெண்ணாக சித்தரிக்காமல், தாயுள்ளம் கொண்ட மாமியார் பாத்திரம் இத்தொடரின் மிகப்பெரிய பலமாக உள்ளது.

ரேஷ்மாவை எதிர்மறையான பாத்திரத்திலேயே பார்த்து ரசிகர்கள் பழகிப்போன நிலையில், இந்த பாத்திரத்தில் ரேஷ்மாவைப் பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது.

ரேஷ்மா, வர்ஷினி சுரேஷ்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீதா ராமன், தற்போது ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் ஆகிய இரு தொடர்களிலும் எதிர்மறையான பாத்திரத்தில் மாமியாராக நடித்து வருகிறார் ரேஷ்மா.

இதனிடையே இந்த புதியத் தொடரில் நல்ல மாமியாராக, மருமகளின் கனவுகளுக்குத் துணை நிற்பவராகவும், அவரின் விருப்பங்களுக்கு ஆதரவு தெரிவிப்பவராகவும் நடிக்கிறார். மாமியாருக்கு முக்கியத்துவம் அளித்து இத்தொடர் எடுக்கப்படுவதால், ரேஷ்மாவுக்கு இத்தொடர் புதிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

தெலுங்கில் இந்தத் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தமிழிலும் ரசிகர்கள் மனதைக் கவரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | பாரதி கண்ணம்மா தொடர் இயக்குநரின் புதிய சீரியல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT