ஓய்வெடுக்கும் அஜித் குமார்.  படம்: எக்ஸ் / சுரேஷ் சந்திரா
செய்திகள்

மற்றவர்களின் விமர்சனங்களால் என்னை மதிப்பிடமாட்டேன்: அஜித்

நடிகர் அஜித் குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது...

DIN

நடிகர் அஜித் குமார் தான் யார் என்பதை மற்றவர்களின் விமர்சனங்களால் மதிப்பிட மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

நடிகர் அஜித் குமார் நடிப்பையும் கார் ரேஸையும் இரு கண்களாக பார்த்து வருகிறார். 6 மாதம் சினிமா படப்பிடிப்பிலும் 6 மாதம் கார் ரேஸிலும் இருப்பேன் என சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது.

குட் பேட் அக்லி திரைப்படம் ரூ.282 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவித்தன. ஏகே - 64 படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவார் எனவும் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில், ஆட்டோ கார் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் அஜித் குமார் பேசியதாவது:

நான் முதலில் நடிக்க வரும்போது தமிழ் சரியாக பேசவில்லை. ஆங்கில மொழியின் சாயல் அதிகமாக இருந்தது. பிறகு எனது பலவீனங்களில் பயிற்சி எடுத்தேன். தற்போது, நான் அடைந்திருக்கும் நிலைமை அனைவருக்குமே தெரியும்.

சினிமா போலத்தான் கார் ரேஸிங்கிலும் காயம் ஏற்படும். பயிற்சி எடுப்பேன். விரைவாக கற்றுக்கொள்வேன்.

என்னைக் குறித்து மற்றவர்களின் விமர்சனங்களால் என்னை நானே மதிப்பிட்டுக்கொள்ள மாட்டேன். நான் வெற்றியாளராக இருக்க விரும்புகிறேன்.

எனது கடைசி காலத்தில் நான் முயற்சித்தேன், நான் ஏதோ செய்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைவேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இடைவேளைக் காட்சியை ரசிகர்களுடன் காண ஆவல்: லோகேஷ் கனகராஜ்

இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் பெருமிதம்

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

SCROLL FOR NEXT