குபேரா படத்தின் காட்சி. படம்: எக்ஸ் / குபேரா தி மூவி.
செய்திகள்

குபேரா தணிக்கைச் சான்றிதழ், ரன்னிங் டைம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தனுஷின் குபேரா திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் அளித்த சான்றிதழ் குறித்து...

DIN

தனுஷின் குபேரா திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கியுள்ளார். இதில் நாகார்ஜுனா பிரதான பாத்திரத்திலும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

குபேரா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் பான் இந்தியப் படமாக உருவாகியுள்ளது. ஜூன் 20 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

ட்ரான்ஸ் ஆஃப் குபேரா (trance of kubera) எனப் பெயரிடப்பட்ட டீசர் விடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

தற்போது, படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளன.

இந்நிலையில், படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அத்துடன் ரன்னிங் டைம் 181 நிமிஷம் (3 மணி நேரம் 1 நிமிஷம்) எனவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 3.15 மணிநேரம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது 3 மணி நேரம் 1 நிமிஷம் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் குபேரா டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் பட்டமளிப்பு

புளியங்குடி பள்ளியில் 186 பேருக்கு மடிக்கணினி

நஷ்டத்திலிருந்து டிடிசியை மீட்க தில்லி அரசு முயற்சி: முதல்வா் ரேகா குப்தா

தமிழகம் முழுவதும் குறள் வார விழா நிகழ்வுகள்: சிறப்பு காணொலி, பதாகையை வெளியிட்டாா் முதல்வா்

பொங்கல் விடுமுறை: சென்னை புறகரில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT