சஞ்சீவ் உடன் விஜய் சேதுபதி இன்ஸ்டாகிராம்
செய்திகள்

விஜய் சேதுபதி நடித்த சீரியலின் பெயர் தெரியுமா?

சின்ன திரையில் பிரபல நடிகரும், விஜய்யின் நண்பருமான சஞ்சீவ் உடன் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

DIN

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதி, சின்ன திரை தொடர்கள், குறும்படங்கள் என படிப்படியாக நடித்து தேசிய விருது வென்ற நடிகராக உயர்ந்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டிலும் (ஹிந்தி சினிமா) விஜய் சேதுபதியின் வளர்ச்சி வியக்கத்தக்கதாக இருந்தாலும், இவர் ஆரம்பகட்டத்தில் நடித்த தொடர்கள், செய்த பணிகள் குறித்து அறிந்தால், அவரின் உழைப்பு எத்தகையது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

சின்ன திரையில் பிரபல நடிகரும், விஜய்யின் நண்பருமான சஞ்சீவ் உடன் விஜய் சேதுபதி, தொடர் ஒன்றில் நடித்துள்ளார். அந்தத் தொடரில் இருவரும் வசனங்களைப் பேசி, திரையை பகிர்ந்துள்ளனர்.

அத்தொடரின் பெயர் பெண். சன் தொலைக்காட்சியில் 2006ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. இயக்குநர் ஜெகன் இத்தொடரை இயக்கினார்.

பெண் தொடரின் போஸ்டர்

சின்ன திரையில் மிகவும் பிரபலமாக இருந்த சஞ்சீவ் உடன், விஜய் சேதுபதி நடித்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இந்த விடியோவைப் பார்க்கும்போது விஜய் சேதுபதியின் வளர்ச்சி எத்தகையது என்பது விளங்குவதாக ரசிகர்கள் பலர் ஆச்சரியத்துடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | மாமியார் பிரியா ராமன் பிறந்தநாளைக் கொண்டாடிய மருமகள் ஷபானா!

இதையும் படிக்க | கடந்த காலத்துக்கு நன்றி! பிறந்த நாளில் சின்ன திரை நடிகை ஷோபனா கருத்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT