ரஜினி, சூர்யா, விஜய் 
செய்திகள்

அடுத்தடுத்து வரும் கூலி, சூர்யா - 45, ஜன நாயகன் அப்டேட்கள்!

நடிகர்கள் ரஜினி, விஜய், சூர்யா படங்களின் புதிய அப்டேட்கள் குறித்து...

DIN

இம்மாதத்தில் கூலி, சூர்யா - 45, ஜன நாயகன் படங்களின் அப்டேட்கள் வெளியாகவுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அதேபோல், நடிகர் சூர்யா - ஆர். ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகிவரும் படம் தீபாவளிக்கு வெளியாகலாம் எனத் தகவல். பெரிதும் எதிர்பார்ப்புகளுடன் தயாராகி வரும் விஜய்யின் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில், இம்மாத இறுதிக்குள் இந்த மூன்று படங்களின் அப்டேட்களும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகவுள்ளன. முதலில், கூலி திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

அடுத்ததாக, ஆர். ஜே. பாலாஜியின் பிறந்த நாளான ஜூன் 20 ஆம் தேதி சூர்யா - 45 படத்தின் பெயர் டீசர் வெளியிடப்படலாம். அதனைத் தொடர்ந்து, விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ல் ஜன நாயகன் கிளிம்ஸ் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்களின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 311 மனுக்கள்

மழையில் நெற்பயிா்கள் சேதம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடைக்காரா்களுக்கு நிதியுதவி

தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் குருக்கள் தினம்

SCROLL FOR NEXT