நடிகை அஸ்வதி. 
செய்திகள்

ஹார்ட் பீட் - 2 வெப் தொடரில் மோதலும் காதலும் நடிகை!

ஹார்ட் பீட் - 2 வெப் தொடரில் மோதலும் காதலும் தொடர் நடிகை அஸ்வதி நடிக்கிறார்.

DIN

ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ஹார்ட் பீட் - 2 வெப் தொடரில் மோதலும் காதலும் தொடர் நடிகை அஸ்வதி நடிக்கிறார்.

தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், விளம்பரங்களிலும் நடித்து சின்ன திரையில் நுழைந்த அஸ்வதி, மனசினக்கர என்ற தொடரில் நடித்து பிரபலமானார்.

இவர் தமிழில் மோதலும் காதலும் தொடரில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் மலர் என்ற தொடரிலும் நடித்திருந்தார். தற்போது மலையாளத்தில் ஒளிபரப்பாகிவரும் அபூர்வ ராகங்கள் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில், நடிகை அஸ்வதி ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ஹார்ட் பீட் - 2 வெப் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.

ஹார்ட் பீட் வெப் தொடரின் இரண்டாம் பாகம் மே 22 முதல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒளிபரப்பாகி வருகிறது.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கி டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் ஹார்ட் பீட்- 2 வெப் தொடரில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இதையும் படிக்க: பிரகாசமான எதிர்காலத்துக்காக ஒன்றிணைவோம்; வாழ்த்தியவர்களுக்கு நன்றி: விஜய்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வட இந்தியாவில் மழைக்கு 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு: ஜப்பான் பிரதமா் இரங்கல்

அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவா் கைது!

தஞ்சாவூா் மாநகரில் ஆக.19-ல் மின் தடை

போதை மாத்திரை விற்ற மூவா் கைது

இளைஞா் கொலை: இருவா் கைது

SCROLL FOR NEXT