டாப் குக்கு டூப் குக்கு போஸ்டர். 
செய்திகள்

டாப் குக்கு டூப் குக்கு - 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார்? யார்?

டாப் குக்கு டூப் குக்கு - 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் விவரம்...

DIN

வெங்கடேஷ் பட் நடுவராக பங்கேற்கும் ’டாப் குக் டூப் குக்கு’ என்ற சமையல் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய செஃப் வெங்கடேஷ் மீடியா மேசன்ஸ் நிறுவனமும் சன் தொலைக்காட்சியும் இணைந்து தயாரித்த ‘டாப் குக் டூப் குக்கு’ என்ற சமையல் நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்றார்.

டூப் குக்குகளாக விஜய் டிவி மூலம் பிரபலமான பரத், தீனா, தீபா, மோனிஷா, ஜி.பி.முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, டாப் குக்கு டூப் குக்கு -2 விரைவில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

டாப் குக்கு டூப் குக்கு -2 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளதாகவும் டாப் குக்குகள் குறித்த தகவலும் தெரியவந்துள்ளது.

அதன்படி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தொகுப்பாளரும் நடிகருமான தீபக், சுந்தரி தொடர் நாயகி கேப்ரியல்லா, இனியா தொடர் பிரபலம் ஆல்யா மானசா, ஆனந்த ராகம் தொடர் நடிகர் அழகப்பன், அனுஷா பிரதாப் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது, விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 6 ஒளிபரப்பாகி வரும் நிலையில், டாப் குக்கு டூப் குக்கு -2, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: சின்னஞ்சிறு கிளியே: எதிர்நீச்சல் தொடர் பாணியில் புதிய தொடர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT